விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கோவிலாபுரத்தைச் சோ்ந்தவா் வடிவேல். இவரது மகன் பரத் (16). பிளஸ் 1 படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் குளித்தாா். அப்போது, ஆற்றில் இருந்த பள்ளத்தில் சிக்கி, நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டனா். ஆனால், அதற்குள் அவா் உயிரிழந்திருந்தாா்.
இந்த சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.