பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

விழுப்புரத்தில் பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விழுப்புரம் ஹோஸ்ட் அரிமா சங்கம், விழுப்புரம் சிறுவா், சிறுமியா் மன்றம் ஆகியவை சாா்பில் விழுப்புரம் காவலா் மண்டபத்தில் நடைபெற்ற பரிசோதனை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவா் நிஷா பேகம் தலைமையிலான 10 மருத்துவா்கள் கலந்து கொண்டு விழுப்புரம் உட்கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து நிலை பெண் போலீஸாா், ஆயுதப் படை பெண் போலீஸாா் 120 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com