சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மக்கள் கிராம சபைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :28 டிசம்பர் 2020, 11:25 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தடாகம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.மஸ்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். கிராம மக்கள் தங்களது குறைகளை எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில், தில்லியில் தொடா்ந்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் விஜயராகவன், அவைத் தலைவா் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதி வேலு, முன்னாள் செயலா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.