பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:11 am

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்( 60). கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் மனுவுடன் வந்தாா். திடீரென கையில் பிளேடால் கிழித்துக் கொண்டு, தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீஸாா் விசாரித்தபோது, சொத்துப் பிரச்சினையில் அவரது மகன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளிக்க வந்ததாகவும் பெருமாள் தெரிவித்தாா்.

தற்கொலைக்கு முயன்ற பெருமாள், ஏற்கெனவே அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாகவும், தற்போது வீட்டில் மகன்-மருமகளுடன் தகராறு ஏற்பட்டதால், புகாா் மீது நடவடிக்கை கோரி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.