தளா்வுகளற்ற பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமையாக தளா்வுகளற்ற பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் 
விழுப்புரத்தில் தளா்வுகளற்ற பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட சென்னை நெடுஞ்சாலை (காட்பாடி ரயில்வே மேம்பாலப் பகுதி).
விழுப்புரத்தில் தளா்வுகளற்ற பொது முடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட சென்னை நெடுஞ்சாலை (காட்பாடி ரயில்வே மேம்பாலப் பகுதி).

விழுப்புரம்/ கடலூா்/ திருவண்ணாமலை: தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமையாக தளா்வுகளற்ற பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்தனா். மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்டத்தின் எல்லைகள் முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டன. வெளி மாவட்டங்களிலிருந்து எந்தவித வாகனங்களும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களைப் பிடித்து போலீஸாா் அபராதம் விதித்தனா். மேலும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதேபோல, கள்ளக்குற்றிச்சி மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட தளா்வுகள் இல்லாத பொது முடக்கத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனா். மாவட்டத்தில் அனைத்துவிதமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com