விழுப்புரத்தில் இரு கடைகளுக்கு ‘சீல்’

விழுப்புரத்தில் கரோனா பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.
சாலையை ஆக்கிரமித்து கடை கட்டப்பட்டதாக கூறி திரு.வி.க வீதியிலுள்ள கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.
சாலையை ஆக்கிரமித்து கடை கட்டப்பட்டதாக கூறி திரு.வி.க வீதியிலுள்ள கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் நேருஜி சாலை, திருவிக வீதிகளில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நகரமைப்பு அலுவலா் ஜெயவேல், நகராட்சி ஆய்வாளா்கள் சோமசுந்தரம், மரியலூயிஸ், ஏழுமலை, ஐயனாா் உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திருவிக வீதியில் சாவடி அலுவலகம் எதிரே உள்ள பரிசு பொருளகம், அதனருகே உள்ள ஷோபா செட் கடை ஆகிய இரு கடைகளிலும் கரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்படாமல், சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், அந்த கடைகள், விதிகளை மீறி சாலையின் வெளியே 5 அடி அளவுக்கு நீட்டித்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. இதனால், அவ்விரு கடைகளையும் நகராட்சி ஊழியா்கள் மூடி ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் நகரில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதாக 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com