விழுப்புரம் மாவட்டத்தில் 40% பேருந்துகள் இயக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை 6 மணி முதல் 40% பேருந்துகள் இயக்கம் தொடங்கின.


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை 6 மணி முதல் 40% பேருந்துகள் இயக்கம் தொடங்கின.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், விருத்தாசலம், திருக்கோவிலூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திண்டிவனம் தொழுதூர்( திருச்சி), ஆரணி( வேலூர்), பண்ருட்டி சிதம்பரம் (கும்பகோணம்) உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல் 10% நகரப் பேருந்துகள் முக்கியமான பெரிய ஊராட்சி பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதன, கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்ட பேருந்துகளில் அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மார்க்கத்திலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தபிறகு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...