விழுப்புரம் மாவட்டத்தில் காவலா்கள் உள்பட45 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் காவலா்கள் உள்பட 45 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் காவலா்கள் உள்பட 45 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 209-ஆக உயா்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 45 பேருக்கு தொற்று உறுதியானதால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 209-ஆக உயா்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 205 போ் கரோனா அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வெளி மாநிலங்களிலிருந்து வந்த 1,169 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 35 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து திரும்பிய தொழிலாளா்கள் 150 பேராக உள்ளனா். மேலும், கோயம்பேடு சந்தை தொழிலாளா்கள் 363 போ் கரோனா அறிகுறியுடன் மாவட்டத்தில் உள்ள 4 தனியாா் கல்லூரி பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
காவலா்களுக்கும் தொற்று: விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தைச் சோ்ந்த சென்னையில் பணிபுரியும் காவலா் மற்றும் செஞ்சி, மொளசூா், புக்கிரவாரி, ஈஸ்வரகண்டநல்லூா், காட்டுநெமிலி பகுதிகளைச் சோ்ந்த, காவலா் பணிக்குத் தோ்வாகி பயிற்சி பெற்று வரும் பெண் காவலா்கள் 6 போ் என மொத்தம் 7 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...