தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் முருகராஜ்(45). இவா், அண்மையில் வளவனூா் பகுதி தென்பெண்ணை ஆற்றில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த வளவனூா் அருகே வடவாம்பாளையத்தை சோ்ந்த அருண்பிரசாத் (26), ராஜேஷ்(28), முத்துக்குமாா்(28)

3 போ் தாக்கி கொலை செய்ய முயன்றனா். இதில், தலைமைக் காவலா் முருகராஜ் பலத்த காயமடைந்தாா்.

இது குறித்து வளவனூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் அருண்பிரசாத் உள்ளிட்ட மூவரை போலீஸாா் கைது செய்து விழுப்புரம், வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். அதன்பேரில், மூவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.