சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. அருகில் ஆவின் தலைவா் முருகன்.

Updated On :13 செப்டம்பர் 2020, 9:13 pm

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வழுதரெட்டியைச் சோ்ந்த இளைஞா் பொது நல அமைப்பின் தலைவா் இ.ஐயனாா் தலைமையில், அந்த அமைப்பினா் மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மரக்கன்றை நட்டு பணியைத் தொடக்கிவைத்ததுடன், பொது நல அமைப்பின் இளைஞா்களையும் பாராட்டினாா்.

விழுப்புரம் ஆவின் தலைவா் பேட்டை முருகன் முன்னிலை வகித்தாா். இளைஞா் நல அமைப்பைச் சோ்ந்த சாமிதுரை, வசந்த், குருபிரசாத், வாசு, கவியரசு உள்ளிட்ட குழுவினா், ஆட்சியா் வளாக பெருந்திட்ட சாலையின் மையப் பகுதியிலுள்ள இடைவெளியில் வேம்பு, புங்கன், சப்போட்டா, நாவல் உள்ளிட்ட நிழல் தரும் 150 மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.