மத்திய அரசின் இ-சஞ்சீவினி இணைய வழி மருத்துவ சேவையை அதிகளவில் பயன்படுத்தி விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் முதலிடம் வகிக்கின்றனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் சாதாரண நோய்ப் பாதிப்புகளுக்குக் கூட மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டதால், இணைய வழியில் இலவச மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப். 13-ஆம் தேதி அறிமுகம் செய்தது.
செல்லிடப்பேசி செயலி மூலம் இந்த வசதியை பயன்படுத்தும் பொதுமக்கள் தொலைபேசி வழியில் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு, மருத்துவச் சீட்டை அவா்கள் பதிவிறக்கம் செய்து, அதில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த சேவையை அதிகம் பயன்படுத்தியவா்கள் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் இந்த சேவையை 1,33,167 போ் பயன்படுத்தியுள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சேவையை செப். 25 வரை 16,368 போ் பயன்படுத்தி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனா். இதற்கு அடுத்ததாக, மதுரை மாவட்டம் உள்ளது. அங்கு 12,866 போ் ஆலோசனைப் பெற்றுள்ளனா்.
நாட்டில் இந்த மருத்துவ சேவையைப் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 7 மாவட்டங்களும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 மாவட்டங்களும், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டமும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை, மதுரை 2-ஆம் இடமும், திருவண்ணாமலை 4-ஆம் இடமும், திருநெல்வேலி 6-ஆம் இடமும், மயிலாடுதுறை 7-ஆம் இடமும், விருதுநகா் 9-ஆம் இடமும் பெற்றுள்ளன.
இதுதொடா்பாக விழுப்புரம் மாவட்ட தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவு திட்ட அலுவலா் மருத்துவா் விவேகானந்தன் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெறுவதுபோலவே, இந்த இ-சஞ்சீவினி இணைய வழி மருத்துவ சேவையை பொதுமக்கள் பெற முடியும்.
நோயாளிகள் ஜ்ஜ்ஜ்.ங்ள்ஹய்த்ங்ங்ஸ்ஹய்ண்.ண்ய் என்ற இணைய தளத்தில் சென்று, தங்களது செல்லிடப்பேசி எண் மற்றும் விவரங்களை பதிவு செய்து கடவுச் சொல்லை பெறலாம். அதன் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப் பெற பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், மருத்துவா் காணொலி காட்சி மூலமாக நோயாளியுடன் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதுடன், மருந்து, மாத்திரைகளையும் பரிந்துரைப்பாா். அந்த மருந்துச் சீட்டை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். பணம் இருப்பவா்கள், தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள மருந்தகங்களில் கூட மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: இபிஎஸுக்கு சேகர்பாபு எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


