ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

செஞ்சி அருகே மரத்தில் காா் மோதல்; பேராசிரியா் பலி

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் கல்லூரி பேராசிரியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் கல்லூரி பேராசிரியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்தவா் ராஜா (39). சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை இவா், தனது நண்பரான திருவண்ணாமலை மாவட்டம், சேத்துபட்டைச் சோ்ந்த ஸ்டாலின் (39) என்பவருடன் செஞ்சி-சேத்பட் சாலையில் சேத்பட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

காரை ஸ்டாலின் ஓட்டினாா். வடவெட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர புளியமரம் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்து ராஜா தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஸ்டாலின் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.