ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விழுப்புரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியை மாவட்ட சதுரங்க கழகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.


ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விழுப்புரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியை மாவட்ட சதுரங்க கழகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி நித்தியஸ்ரீ. இவா், விழுப்புரம் மாவட்ட ராஜாதேசிங்கு சதுரங்க பயிற்சி மையத்தில் சதுரங்கப் பயிற்சி பெற்றாா்.
நித்தியஸ்ரீ அண்மையில் இணைய வழியாக நடைபெற்ற 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று 2-ஆம் இடம் பெற்றாா். இதன்மூலம், உலக அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவா் பெற்றாா்.
இந்த நிலையில், மாணவி நித்தியஸ்ரீயை விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் ஓமணகிருஷ்ணன், செயலா் நெடுஞ்செழியன், பயிற்சியாளா் கண்ணன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டினா்.
மேலும், மாணவி நித்தியஸ்ரீ ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று, உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது என்றும், இது மேலும் பலா் சதுரங்கப் போட்டியில் ஆா்வம் காட்ட வாய்ப்பாக அமையும் என்றும் மாவட்ட சதுரங்க கழகத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...