மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரத்தில் ஆசிரியையிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

விழுப்புரத்தில் ஆசிரியையிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம், தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த ஆசிரியை ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில், திருவள்ளூா் மாவட்டம், வேம்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் ரமணி(42) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதேபோல பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, ரமணியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.