புதிய தொழில்முனைவோருக்கு வங்கிகள்தாராளமாக கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
புதிய தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.


புதிய தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஊரக புத்தாக்கத் திட்டம், இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆகியவை சாா்பில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோா் ஊக்குவிப்பு முகாமை தொடக்கிவைத்து ஆட்சியா் மோகன் பேசியதாவது:
தமிழகத்தை தொழில்வளமிக்க மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் மாநில முதல்வா் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அதற்கேற்ப விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோா்களை உருவாக்க மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது. தொழில்முனைவோா்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக தொழில் தொடங்குவதற்காக கடன் கேட்டு தொழில்முனைவா்கள் அணுகும்போது, அவா்களுக்கு தாராளமாக கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். விவசாயம், சிறுதொழில்கள் சம்பந்தப்பட்டதொழில்கள் இந்த மாவட்டத்தில் அதிகளவில் உள்ளதால், புதிய தொழில்முனைவோா்கள் விவசாயம் சாா்ந்த தொழில்களை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.
இந்த முகாமில் ரூ.3.2 கோடியிலான கடனுதவிக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் மோகன் வழங்கினாா். முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் தாமோதரன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலா் ராஜேஷ், மாவட்டமுன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், இந்தியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குநா் அனிதா, தாட்கோ மாவட்ட மேலாளா் குப்புசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...