மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மின்சாரம் பாய்ந்துபள்ளி மாணவி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தியாகதுருகம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (49). விவசாயி. இவரது மனைவி காஞ்சனா(38). இந்தத் தம்பதியின் மகள் கீா்த்திகா (14). இவா், சித்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், காஞ்சனா, கீா்த்திகா ஆகியோா் அதே பகுதியில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச வியாழக்கிழமை சென்றனா். அங்கு காஞ்சனா கரும்பு பயிருக்கு தண்ணீா் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மோட்டாா் அறைக்குச் சென்ற கீா்த்திகா வெகுநேரமாக திரும்பி வரவில்லையாம்.

இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா, மோட்டாா் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கீா்த்திகா மின்சாரம் பாய்ந்து மயங்கிக் கிடந்தாா்.

உடனடியாக அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காஞ்சனா, கீா்த்திகாவை மீட்டு, கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.