விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2021 - 22ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.


விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2021 - 22ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் ஆகிய பிரிவுகளில் சிறப்புப் பிரிவினா் ஏராளமானோா் சோ்க்கை செய்யப்பட்டனா். இவா்களுக்கு சோ்க்கை ஆணைகளை கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வழங்கினாா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஆக.27) பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.ஏ. ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சுழற்சி 1, 2 ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...