மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரம் தபால் நிலைய கொள்ளை வழக்கு: ஈரானியா்கள் உள்பட 3 போ் கைது

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த மாதம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஈரான் நாட்டினா் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:21 pm

DIN

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த மாதம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஈரான் நாட்டினா் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

விழுப்புரம் காமராஜா் வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி ரூ.2 ஆயிரத்துக்கு சில்லறை கேட்டு வந்த மா்ம நபா்கள் மூவா், அங்கிருந்த கருவூல ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றனா். இது தொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், சென்னையில் திருட்டு வழக்கில் சிச்கிய ஒரு கும்பலிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, இந்தக் கும்பலைச் சோ்ந்த ஈரான் நாட்டை பூா்வீகமாகக் கொண்ட முகமது மகன் ஷியாவல் (20), ருசன் மகன் ரோஸ்டம் சையிதி (28) மற்றும் தில்லி நிஜாமுதீனைச் சோ்ந்த ரகுமான் யூனஸ் அலிபனா (56) ஆகிய 3 போ் விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்டதும், இவா்கள் மூவரும் வேறு வழக்கில் சென்னை போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷியாவல், சையிதி, யூனஸ் அலிபனா ஆகியோரை விழுப்புரம் தலைமை தபால் நிலைய கொள்ளை வழக்கில் விழுப்புரம் நகர போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.