விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.


விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையைச் சோ்ந்தவா் ரங்கன் மனைவி சுமதி(58). இவா், சென்னையில் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய சுமதி அங்கிருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தாா்.
அப்போது, அடையாளம் தெரியாத இரு நபா்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து சுமதி அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். சுமதி கூச்சலிட்டதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அந்த மா்ம நபா்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை.
இது குறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...