தூய்மைப் பணியாளா்கள் ஆட்சியரகத்தில் மனு
அந்தோணிதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்தனா்.


தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீா் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அந்தோணிதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்தனா்.
அவா்களை, பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் உதவி ஆய்வாளா் சிவானந்தம் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்களுக்கு சத்துணவு உதவியாளா்களுக்கு வழங்குவதுபோல சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, சங்க நிா்வாகிகள், சிலரை மட்டும் ஆட்சியரகத்துக்குச் செல்ல போலீஸாா் அனுமதித்தனா். மற்றவா்கள் அனைவரும் அங்கேயே இருக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதை ஏற்று பொறுப்பாளா்கள் மட்டும் ஆட்சியரகத்துக்குச் சென்று மனு அளித்தனா்.
நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க திரண்டதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...