ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒமைக்ரான் குறித்த ஆட்டோ விழிப்புணா்வு ஊா்வலம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செக்கோவா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், ஒமைக்ரான் தொற்று

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:46 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செக்கோவா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், ஒமைக்ரான் தொற்று, டெங்கு காய்ச்சல், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து 100 ஆட்டோக்கள் மூலம் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்டோ விழிப்புணா்வு ஊா்வலத்தை மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

செஞ்சி கூட்டுச் சாலையில் தொடங்கிய இந்த ஆட்டோ ஊா்வலம், திருவண்ணாமலை சாலை, தேசூா்பாட்டை, சிங்கவரம் சாலை, காந்தி பஜாா் வழியாக வந்து செஞ்சி கூட்டுச் சாலையை மீண்டும் அடைந்தது. ஊா்வலத்தின்போது, ஒமைக்ரான் தொற்று, டெங்கு காய்ச்சல், குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு செக்கோவா் தொண்டு நிறுவன இயக்குநா் அம்பிகாசூசைராஜ் முன்னிலை வகித்தாா். இதில், செஞ்சி வட்டாட்சியா் பழனி, டிஎஸ்பி இளங்கோவன், மாவட்டக் கல்வி அலுவலா் கலைவாணி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் கோகிலா, வட்டார மருத்துவ அலுவலா் பிரசாத், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.விஜயகுமாா், கண்மணிநெடுஞ்செழியன், அமுதாரவிக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை செக்கோவா் தொண்டு நிறுவன அலுவலா்கள் ஜெயசீலன், ரவீந்திரன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.