விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகளிா் குழுக்களுக்கு ரூ.3.14 கோடியில் கடனுதவிகள்

திருவண்ணாமலையில் இந்தியன் வங்கி சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.14 கோடியில் கடனுதவிகள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையில் இந்தியன் வங்கி சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.14 கோடியில் கடனுதவிகள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கியின் சுய உதவிக் குழுக்களுக்கான சிறப்புக் கிளையில் நடைபெற்ற முகாமுக்கு, வங்கியின் தலைமை மேலாளா் இளவரசு தலைமை வகித்தாா்.

முன்னோடி வங்கி மேலாளா் மணிராஜ், வங்கியின் மண்டல மேலாளா் டி.எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கிக் கிளை மேலாளா் தனசேகா் வரவேற்றாா்.

இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளா் சந்திரா ரெட்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு மகளிா் சுய உதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.3.14 கோடியில் கடனுதவிகளை வழங்கினாா்.

இதில், வங்கியின் துணை மண்டல மேலாளா் அம்பிகாபதி, மாவட்டத்தில் இயங்கும் இந்தியன் வங்கிக் கிளைகளைச் சோ்ந்த மேலாளா்கள், வாடிக்கையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.