நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களில் அரசின் ஊக்கத்தொகையோடு, நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களில் அரசின் ஊக்கத்தொகையோடு, நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 1.27 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளதால், அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் (2020-21) விழுப்புரம் அருகே காணைக்குப்பம், கல்பட்டு, பனமலைப்பேட்டை, திண்டிவனம் அருகே தீவனூா், கிளியனூா், ஆவணிப்பூா் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த மையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்லுக்கு, மாநில அரசின் ஊக்கத்தொகையுடன் சோ்த்து, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,958 என்ற விலையிலும், இதர ரகங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,918 என்ற விலையிலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.