நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்டமங்கலம் ஒன்றியத்தில் ரூ.17 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.17 கோடியிலான புதிய அரசுத் திட்டப் பணிகளை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.17 கோடியிலான புதிய அரசுத் திட்டப் பணிகளை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கண்டமங்கலம் ஒன்றியம், குமளம் ஊராட்சி, வி.மாத்தூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, அந்தக் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட ரூ.70 லட்சத்திலான திட்டப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, அருகே அற்பிசம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, கெங்கராம்பாளையம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தாா். அந்தக் கிராமத்தில் ரூ.164 லட்சத்திலான 27 வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினாா்.

இதேபோல, பஞ்சமாதேவி, பரசுரெட்டிப்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, வடவாம்பலம், வி.புதூா், வி.அகரம், பூவரசன்குப்பம் ஆகிய கிராமங்களில் புதிய சாலைப் பணிகள், அரசுக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கிவைத்தாா். இதன்மூலம், மொத்தம் ரூ.17.28 கோடியில் 303 பணிகளை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியின்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களையும், விளையாட்டு வீரா்களுக்கு சீருடைகளையும் அரசு சாா்பில் அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், விழுப்புரம் மாவட்ட விற்பனைக் குழுத் தலைவா் எல்.கே.கண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் வேல்முருகன், அதிமுக ஒன்றியச் செயலா் ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.