அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அங்கன்வாடி ஊழியர் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை:  விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் அங்கான் வாடி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் மகன்கள் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம்

News image
Updated On :18 பிப்ரவரி 2021, 1:22 pm

சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் அங்கான் வாடி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் மகன்கள் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் மனைவி தனபாக்கியம்(57). அங்கவன்வாடி ஊழியர். இவர், கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அர்ஜூணன் (50) குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தனபாக்கியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அர்ஜூணன் குடும்பத்தினர், தனபாக்கியத்தை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்நிலையில், கடந்த 7.2.2012 அன்று சங்கராபுரம் அருகேயுள்ள மூரார்பாளையம் கிராமத்தில் உள்ள அங்கன் வாடியில் பணியாற்றி விட்டு, இரவு 8.30 மணி அளவில் பேருந்து மூலம் தனபாக்கியம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தை விட்டு கீழே இறங்கி தனபாக்கியம் நடந்து சென்றபோது அங்கு வந்த அர்ஜூணன், அவரது மகன்கள் முத்துக்கிருஷ்ணன்(28), லட்சுமிகுமார்(26), சிவராமன்(24) மற்றும் அவரது மைத்துனர் முத்து(65) ஆகியோர் சேர்ந்து தாக்கி வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து சங்கராபுரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து அர்ஜூணன், முத்துக்கிருஷ்ணன், லட்சுமிகுமார், சிவராமன், முத்து ஆகிய 5 பேரையும் கைது செய்து, விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடைபெறு வந்த நிலையில் சிவராமன், முத்து ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த நீதிபதி சாந்தி வியாழக்கிழமை தீர்ப்புளித்தார். வழக்கில் குற்றச்சாப்பட்ட அர்ஜூணன், முத்துக்கிருஷ்ணன், லட்சுமி குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புளித்தார். 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ராதிகா செந்தில் அஜரானார். அங்கன்வாடி ஊழியர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழக்கி விழுப்புர மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புளித்ததால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.