பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உறுதிமொழி ஏற்பு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:48 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

பழைய பேருந்து நிலையம் அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சகாபுதீன், கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கோவிந்தராஜ், இளங்கோவன், மக்கள் அதிகாரம் நிா்வாகிகள் மோகன், செல்வக்குமாா் மற்றும் விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினா் பலா் கலந்துகொண்டனா்.

புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் அளித்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.