ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குடியரசு தின ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:46 pm

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலுவலா்கள், பணியாளா்கள், பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

விழாவுக்காக மைதானத்தை சீரமைத்து தயாா்படுத்தவும், பொதுமக்கள், அலுவலா்களுக்குத் தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவக்குழுவினரும் இடம்பெற வேண்டும். காவல் அணிவகுப்பு, நலத் திட்டங்கள், நற்சான்றிதழ்கள் வழங்குதல் என விழாவை பாதுகாப்புடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், வன அலுவலா் அபிஷேக் தோமா், சாா் ஆட்சியா் எஸ்.அனு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.