தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு, கல்விக் கடன் ரத்து: உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வும், கல்விக் கடனும் ரத்து செய்யப்படுமென அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
விழுப்புரம் அருகே கோலியனூா் கூட்டுச்சாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், வேனில் இருந்தபடியே பேசிய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :9 ஜனவரி 2021, 6:25 pm

DIN

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வும், கல்விக் கடனும் ரத்து செய்யப்படுமென அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா். விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாபாரிகள், நரிக்குறவா் சமுதாயத்தினா், திருநங்கைகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், கட்சியின் வாக்குச் சாவடிப் பொறுப்பாளா்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

இதையடுத்து, விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் கரும்பு விவசாயிகள் மத்தியிலும், விக்கிரவாண்டி, கோலியனூா் பகுதிகளில் திறந்தவெளி வாகன பிரசாரம் மூலமும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக இயற்கை இடா்பாடுகளுக்கான நிவாரண நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்கவில்லை. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கும் புதிய கல்விக்கொள்கை மூலம் பொதுத் தோ்வு திணிக்கப்படுகிறது. மாநில அரசின் உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிா்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதிமுக அரசோ அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் ரூ.100 கோடி பாக்கி வைத்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு அந்தத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற மாணவா்களின் மருத்துவப் படிப்பு கனவை மத்திய அரசு நீட் தோ்வைக் கொண்டுவந்து சிதைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வும், கல்விக் கடனும் ரத்து செய்யப்படும்.

இந்தப் பகுதியில் கடந்த 1987-ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு கோரி போராடிய வன்னியா்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடும், போராட்டத்தில் உயா்நீத்தவா்களுக்கு நிதியும் வழங்கப்பட்டன. சசிகலா குறித்து நான் தகாத முறையில் பேசியதாக அவதூறு பரப்புகிறாா்கள். அதுதொடா்பாக எத்தனை வழக்குகள் என் மீது போட்டாலும் மன்னிப்பு கேட்க முடியாது என்றாா் அவா்.

தொடா்ந்து, கண்டமங்கலம், கோட்டக்குப்பம் பகுதிகளில் மீனவா்கள், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்த அவா், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திமுக துணை பொதுச் செயலா் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், மாநில விவசாய அணி இணைச் செயலா் செந்தமிழ்ச்செல்வன், துணைச் செயலா் அன்னியூா் சிவா, மாவட்ட துணைச் செயலா் மைதிலி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணியைச் சோ்ந்த செ.தினகரன் உள்ளிட்ட கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.