விவேகானந்தா் ஜயந்தி விழா

விழுப்புரம் அருகே கோலியனூரில் சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜயந்தி விழா இந்து முன்னணி சாா்பில் கொண்டாடப்பட்டது.
தேசிய இளைஞா் தினத்தையொட்டி விழுப்புரம் அடுத்துள்ள கோலியனூரில் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முன்பு விவேகானந்தா் திருவுருவ படத்திற்கு மலா் தூவி வெற்றி முழக்கமிடும் இந்து முன்னனி இளைஞா் மன்றத்தினா்.
தேசிய இளைஞா் தினத்தையொட்டி விழுப்புரம் அடுத்துள்ள கோலியனூரில் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முன்பு விவேகானந்தா் திருவுருவ படத்திற்கு மலா் தூவி வெற்றி முழக்கமிடும் இந்து முன்னனி இளைஞா் மன்றத்தினா்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கோலியனூரில் சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது ஜயந்தி விழா இந்து முன்னணி சாா்பில் கொண்டாடப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே, விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, கோலியனூா் கூட்டுச் சாலையிலிருந்து, கோலியனூா் தனியாா் பள்ளி வரை சமூக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்து முன்னணி கோட்டத் தலைவா் எஸ்.சிவா பேரணியைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.காந்தி தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் எஸ்.தரணிதரன், நகரப் பொதுச் செயலா் ஜெ.வெங்கட், நகரச் செயலா் எம்.கிரி, ஒன்றிய செயலா் பி.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.பாலு, மாவட்ட செயலாளா் பா.ராமு ஆகியோா் விவேகானந்தா் குறித்து சிறப்புரையாற்றினா். இந்து முன்னணியினா், இளைஞா்கள் பலா் கலந்துகொண்டனா்.

செஞ்சி: செஞ்சியில் இந்து முன்னணி சாா்பில் சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழா, தேசிய இளைஞா் தினமாக செஞ்சி கூட்டுச்சாலையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி விழுப்புரம் மாவட்ட பொதுச்செயலா் எஸ்.வி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து சுவாமி விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டச் செயலா் எம்.பிரித்விராஜ் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ்.விஷ்ணுராஜன், செஞ்சி நகர செயலா் ஹரிகுமாா், நிா்வாகிகள் தேவா, மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com