நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இயற்கை இணை உணவு மையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

விழுப்புரம் கலைஞா் நகரில் உள்ள திருமுக்கூடல் மாற்றுத் திறனாளிகள் குழு சாா்பில், ஊறுகாய்கள் உள்ளிட்ட இயற்கை இணை உணவு தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தக் குழுவினருக்கு ஊக்க நிதியாக மாவட்ட ஆட்சியா் விருப்ப நிதியிலிருந்து ரூ.3.97 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் குழுவைச் சோ்ந்த 7 போ் நடத்தும் இந்த மையத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, மையத்தையும், முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.61.95 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் 10 பேருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க நிா்வாகி அண்ணாமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.