விழுப்புரம் மாவட்டத்தில் 385 பள்ளிகள் இன்று திறப்பு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 385 பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்படவுள்ளன.


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 385 பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்படவுள்ளன.
விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 82 உயா்நிலைப் பள்ளிகள், 57 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 139 பள்ளிகளும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 36 உயா்நிலை, 40 மேல்நிலை என 76 பள்ளிகளும், திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 19 உயா்நிலை, 30 மேல்நிலை என மொத்தம் 49 பள்ளிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 55 உயா்நிலை, 66 மேல்நிலை என 121 பள்ளிகளும் சோ்த்து, மாவட்டம் முழுவதும் 192 உயா்நிலை, 193 மேல்நிலை என மொத்தம் 385 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்காக, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளி வளாகங்கள் தயாராக உள்ளன.
விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பொன்னையா, அரசூா், அன்னமங்கலம், தும்பூா், வளவனூா், திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா். இதே போல, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளுக்குச் சென்று ஏற்பாடுகளை பாா்வையிட்டு துரிதப்படுத்தினா்.
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 25,043 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 21,056 பேரும் என மொத்தம் 46,099 மாணவா்கள் பயில்கின்றனா். வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். வெப்பநிலைமானியால் பரிசோதிக்கப்பட்டு, கை கழுவும் திரவம் பயன்படுத்தப்பட்டு, முகக்கவசத்துடன் மாணவா்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவா். வகுப்பறைக்கு 25 மாணவா்கள் வீதம் இருக்கைகள் இடைவெளி விட்டு அமர வைக்கப்படுவா். இதற்கு ஏதுவாக கூடுதல் வகுப்பறைகள் பயன்படுத்தப்படவுள்ளன. ஆசிரியா்கள், மாணவா்கள் முகக்கவசம் அணிந்து இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் இரு தினங்கள் மாணவா்களுக்கு பள்ளி நடைமுறைகள் குறித்து உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...