ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஓய்வூதியத்துக்காக போராடி வரும் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி

மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளித்தார்.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்த கமலம்.
Updated On :25 ஜனவரி 2021, 7:50 am

DIN

மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னக்குப்பத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வி. சுப்பிரமணியன்(70). உடல் நலக்குறைவால் கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இரண்டாவது மனைவி கமலம்(69). கணவருக்கான(பென்ஷன்) வாரிசு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மனு அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அமைச்சராக இருந்த சுப்ரமணியன் முதல் மனைவி வேளாங்கண்ணி இறந்த பிறகு, தன்னை திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. 25 ஆண்டுகளாக அவருடன் வசித்து வந்தேன். இதனை அடுத்து 2010ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். இதன்பிறகு அவரது ஓய்வுதியம் (பென்ஷன்) வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் வழங்காமல் உள்ளனர்.

குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப் பட்ட நிலையில், பென்சனை வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். இதனிடையே முதல் மனைவியின் மகன் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், உரிய ஆவணங்கள் இருந்தும், ஓய்வூதியம் வழங்காமல் மறுத்து வருகின்றனர். இதனால் எந்த வருவாயும் இன்றி எனது பேத்தியுடன் விழுப்புரத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறேன்.

தமிழக அரசும், அரசு அதிகாரியும் எனக்கான வாரிசு ஓய்வூதியத்தை கிடைக்க வழிவகை செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.