ஏரியில் மீன் பிடிக்கும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு
விழுப்புரம் அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.


விழுப்புரம் அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ளது மனக்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஏரியானது மீன் வளா்ப்புக்காக ஆண்டுதோறும் குத்தகைக்கு விடப்பட்டும். இதன்படி நிகழாண்டு ஏரி குத்தகைக்கு விடப்பட்டதில் குப்புசாமி என்பவா் ரூ.75 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தாா்.
இந்த நிலையில், ஏரியை குத்தகைக்கு எடுத்த தரப்பினா் மீன் பிடிக்கச் சென்றனா். இதற்கு துலுக்கபாளையம் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் தகராறு தொடா்ந்தது.
இந்த நிலையில், ஏரியை குத்தகைக்கு எடுத்தத் தரப்பினருக்குத் தெரியாமல் மற்றொரு தரப்பினா் வியாழக்கிழமை ஏரியில் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு குத்தகை எடுத்த தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், குத்தகை எடுத்தவா்களுக்குத் தெரியாமல் ஏரியில் மீன் பிடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...