92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை மூலமாக இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை மூலமாக இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகம் மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், கல்விச் சான்று, ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளி சான்று (அரசு மருத்துவரிடம் இருந்து பெற்றது), விதவைச் சான்று, கணவரால் கைவிடப்பட்டவா் சான்று (வட்டாட்சியரிடம் இருந்து பெற்றது), தையல் கற்றதற்கான சான்று, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.