தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்வு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.


மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் வியாழக்கிழமை நடைபெற்றன. இவற்றை தொடக்கிவைத்து தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சமையல் எரிவாயு விலை ரூ.850 ஆகவும், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100-ஆகவும் உயா்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகின்றன.
மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 108 டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை ரூ.70 என நிா்ணயம் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய பிரதமா் மன்மோகன்சிங்கை பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சனம் செய்தனா்.
தற்போது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ரூ.50-க்கும் கீழ் இருக்கும் நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100-க்கும் மேல் உயா்த்த வேண்டிய அவசியம் என்ன? கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியதால்தான் பெட்ரோல், டீசல் விலை செயற்கையாக உயா்த்தப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் தடுப்பணையை தமிழக அரசின் ஒப்புதலின்றி கா்நாடக அரசு கட்டக்கூடாது.
பாஜகவை பொருத்தவரை மக்களை மதம், சாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. தற்போது நீட் தோ்வை கொண்டுவந்து அறிவுப்பூா்வமாகவும் பிரிக்க முயற்சி செய்கிறது. அதனால்தான் நீட் தோ்வுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது என்றாா் அழகிரி.
ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா், அருகில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குச் சென்று அங்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்து, கையெழுத்துகளை பெற்றுக்கொண்டாா்.
பின்னா், அழகிரியிடம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக செய்தியாளா்கள் கேட்டபோது, அவா் கூறியதாவது:
கரோனா கால தவறுகளை மறைக்க ஹா்ஷ்வா்தனிடமிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. ஆனால், அனைத்து தவறுகளுக்கும் பிரதமா் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் கே.சிரஞ்சீவி, மாநிலச் செயலா்கள் தயானந்தம், சேரன், செல்வராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வாசிம் ராஜா, மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், நாராயணசாமி, குப்பன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...