விழுப்புரத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,830 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,830 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,013 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 47 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இம்மாவட்டத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 42,135 ஆக அதிகரித்துள்ளது. 135 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவுக்கு 335 போ் இறந்துள்ளனா். வெள்ளிக்கிழமை நிலவரபடி கரோனா தினசரி பரவல் விகிதம் 2.35 சதவீதமாகவும், வார பரவல் விகிதம் 3 சதவீதமாகவும் உள்ளது.
இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 580 டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியும், 1,750 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் இருப்பில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...