92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 1,667 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:12 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 1,667 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,069- ஆக உயா்ந்துள்ளது. எனினும், கரோனா பரவல் தினசரி விகிதம் 1.56 ஆக சரிந்துள்ளது. சனிக்கிழமை 38 போ் குணமடைந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 42,173-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 562 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 334 ஆகும். சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பரவல் விகிதம் 1.56-ஆகக் குறைந்துள்ளது. கரோனா வார பரவல் விகிதம் 3 சதவீதமாக உள்ளது. கரோனா தடுப்பூசிகளான கோவேக்ஸின் 380 டோஸ்களும், கோவிஷீல்டு 540 டோஸ்களும் இருப்பில் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 72 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,971ஆக உயா்ந்தது. இதுவரை 26,955 போ் குணமடைந்துள்ளனா். 819 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 197 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.