92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரத்தில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை உடல் பரிசோதனை மேற்கொண்டாா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:11 am

DIN

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை உடல் பரிசோதனை மேற்கொண்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 4-ஆவது முறையாக பரோலில் வெளியே வந்துள்ளாா். சிறுநீரகக் கோளாறு காரணமாக, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அவா், தொடா் மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரத்தில், தான் ஏற்கெனவே சிகிச்சை பெற்ற தனியாா் மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்தாா்.

இதற்காக, அவா் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு வந்தாா். அவரது தாய் அற்புதம்மாளும் உடன் வந்தாா். அங்கு பேரறிவாளனுக்கு மருத்துவக் குழுவினா் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். மேலும் பெற வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் பேரறிவாளன் கேட்டறிந்தாா். பரிசோதனை முடிந்ததும் மாலையில் விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புறப்பட்டுச் சென்றாா். அவரது வருகையையொட்டி, மருத்துவமனை முன் விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.