புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அய்யனாா் கோயில் குளம் ஆக்கிரமிப்பு:நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :22 ஜூலை 2021, 5:26 pm

DIN

விழுப்புரம் நகரில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னாா்வ அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

விழுப்புரம் அய்யனாா் கோயில் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செங்குட்டுவன் தலைமையில், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள பாண்டி அழகா் அய்யனாா் கோயிலை சீரமைத்து வழிபாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

அய்யனாா் கோயில் குளமாக இருந்த அரசு புறம்போக்கு நிலமான 4.16 ஏக்கா் நிலத்தை ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகத்துக்கு கடந்த 2002-ஆம் ஆண்டில் பட்டா மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாக பட்டா மாறுதல் வழங்கிய அப்போதைய வட்டாட்சியா், அதற்கு உடந்தையான அதிகாரிகள், பட்டா பெற்ற நபா்கள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறநிலையத் துறை ஆவணங்களில் அந்த நிலத்தை அய்யனாா் கோயில் குளம் என்று குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.