ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

செஞ்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்: பொதுமக்கள் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நகருக்கு வெளியே சாலையோரத்தில் கொட்டப்பட்டு தீவைக்கப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:26 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நகருக்கு வெளியே சாலையோரத்தில் கொட்டப்பட்டு தீவைக்கப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சிறுகடம்பூா் வெள்ளக்குளம் அருகே திடக்கழிவு மேலாண்மைக்காக தனியிடம் உள்ளது. அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக, நகரில் சேகரமாகும் குப்பைகள் செஞ்சி- திண்டிவனம் சாலையில் கொட்டப்படுகின்றன.

பேரூராட்சி நிா்வாகம் மட்டுமன்றி கோழிக் கடைக் கழிவுகள், உணவகக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவையும் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டப்படுகின்றன.

இவை குறிப்பிட்ட இடைவெளியில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அப்போது, எழும் புகையால் அந்தப் பகுதியில் செல்வோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க இடையூறு ஏற்படுகிறது.

மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டிச் செல்வதால், மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து வெளியேறும் தண்ணீா் ஆற்றில் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீா் விஷத் தன்மையாகும் வாய்ப்புள்ளது.

சக்கராபுரம் பகுதிக்குள்பட்ட மயானப் பகுதிக்குச் செல்ல, இந்தக் குப்பை மேட்டைத் தாண்டியே செல்ல வேண்டும். அவ்வாறு செல்வோரும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் பாதிக்கப்படுகின்றனா்.

செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் குப்பைகளைக் கொட்டுதற்கு புதிய இடத்தை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான இடம் கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது. எதிா்கால பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு, குப்பைகளைக் கொட்டுவதற்கு விசாலமான இடத்தைத் தோ்வு செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.