விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,554-ஆக அதிகரித்தது. 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 42,723 போ் குணமடைந்தனா். 493 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும் ஒருவா் பலி: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 338-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,718-ஆக உயா்ந்தது.
இதுவரை 27,861 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 660 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...