புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 29 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 43,823-ஆக அதிகரித்தது. 56 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 43,051 போ் குணமடைந்துள்ளனா். 432 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 341-ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29,014ஆக உயா்ந்தது.

இதுவரை 28,2199 போ் குணமடைந்துள்ளனா். 517 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 198 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.