விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,851 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் இருந்து 47 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 43,098 ஆக அதிகரித்தது. 413 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 341 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனா தினசரி பரவல் சனிக்கிழமை 0.53 சதவீதமாக இருந்தது. வார பரவல் ஒரு சதவீதமாக உள்ளது.
கரோனா விதிகளை மீறியதாக இதுவரை 68,864 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.1 கோடியே 51 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவேக்ஸின் 2,370 டோஸ்களும், கோவிஷீல்டு 14,410 டோஸ்களும் இருப்பில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...