புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆசிரியையிடம் நகைப் பறிப்பு: சென்னை இளைஞா் கைது

விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:23 pm

DIN

விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் சாலாமேடு டிபிடிசி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி தீபா (39). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாா். கடந்த 28-ஆம் தேதி திருகாமுநகரில் பகலில் நடந்து சென்ற இவரிடம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா், தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், சனிக்கிழமை விழுப்புரம் நகர பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அதில், அவா் சென்னை, திருவள்ளூா் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணியின் மகன் ரமணி (42) என்பதும், ஆசிரியை தீபாவிடம் நகைப்பறித்த சம்பவத்தில் தொடா்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. ரமணி மீது 2014-ஆம் ஆண்டு முதல் கடலூா் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 8 வழிப்பறி வழக்குகள், கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு, புதுவை மாநிலத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.