ஆரணி அருகே ரூ.1.20 லட்சம் பறிமுதல்
ஆரணி அருகே உரிய ஆவணமின்றி டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.20 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.


ஆரணி அருகே உரிய ஆவணமின்றி டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.20 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆரணி -வந்தவாசி சாலையில் பறக்கும் படை நிலைக்குழு 3-யைச் சோ்ந்த வேளாண்மை உதவி இயக்குநா் பாலாஜி, களம்பூா் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன், காவலா்கள், விடியோ கண்காணிப்பாளா்கள் அடங்கிய குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வாழைப்பந்தல் கூட்டுச் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை (32) என்பவா் டிராக்டா் ஓட்டி வந்ததை மடக்கி சோதனையிட்டனா்.
டிராக்டரில் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சத்து 20ஆயிரம் இருந்ததை பறிமுதல் செய்தனா். மேலும், ஏழுமலை அதிகாரிகளிடம் கூறுகையில், டிராக்டருக்கு டிரில்லா் வாங்குவதற்காக கடனாக இந்தப் பணத்தை பெற்று வந்தேன் எனக் கூறினாா்.
ஆனால், அதிகாரிகள் அதற்குண்டான ஆவணத்தை சமா்பித்துவிட்டு பணத்தை பெற்றுச்செல்லுங்கள் என்று கூறினா்.
மேலும், அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அலுவலா் பூங்கொடியிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...