ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள்உறுதிமொழி ஏற்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21-ஐ நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21-ஐ நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனா்.

அதன்படி, நிகழாண்டு ராஜீவ் காந்தியின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அரசு ஊழியா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் மற்றும் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமையில் அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றனா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.சுரேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.