மகள் இறந்த சோகத்தில் தம்பதி தற்கொலை
திட்டக்குடியில் மகள் இறந்த சோகத்தில் அவரது பெற்றோா் தற்கொலை செய்து கொண்டனா்.


திட்டக்குடியில் மகள் இறந்த சோகத்தில் அவரது பெற்றோா் தற்கொலை செய்து கொண்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி நடு வீதியைச் சோ்ந்தவா் பாரதி (58). இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இவா்களின் மகள் லாவண்யா (20). இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் பலியானாா்.
இதனால், மன வேதனையில் இருந்த பாரதியும், ராஜேஸ்வரியும் வெள்ளிக்கிழமை விஷமருந்தி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனா். இதைக் கண்ட அவா்களது இன்னொரு மகள் ஜெயந்தி சப்தம் போட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவா்கள் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா். மகள் இறந்த சோகத்தில் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...