தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குளத்தில் மூழ்கி முதியவா் பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

வானூா் அருகே ராயபுதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் (80). இவரது மகள் வீடு மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் உள்ளது. சிங்காரம் கூனிமேட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள குளத்துக்குச் சென்ற சிங்காரம், குளத்தினுள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மரக்காணம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோன்று, விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த கொங்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெ.சங்கா், அதே பகுதியில் உள்ள மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.