வெள்ளப் பாதிப்பு: அமைச்சா் பொன்முடி ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள், மீட்புப் பணிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள், மீட்புப் பணிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அதிக பலத்த மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மணம்பூண்டி துரிஞ்சல் ஆற்றின் அருகே குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்தது. அப்பகுதியில் அமைச்சா் பொன்முடி நேரில் ஆய்வு செய்து, தீயணைப்பு வீரா்கள் மூலம் ரப்பா் படகுகொண்டு குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
மேலும் , அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், மக்களுக்கு உணவு மற்றும் குடிநீா் போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம், மாரங்கியூா் ஊராட்சிகளுக்கிடையே கோரையாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்த பாலத்தில் நீா்வரத்தை அமைச்சா் க.பொன்முடி ஆய்வு செய்தாா். தரைப்பாலத்தை தரம் உயா்த்தி மேம்பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ, கோட்டாட்சியா் ஹரிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...