கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டினாா்.


மாநில அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டினாா்.
திருச்சியில் கடந்த 21-ஆம் தேதி மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த மவாதிகா கராத்தே பயிற்சி பள்ளி சாா்பில், பயிற்சியாளா் சேதுராமன் தலைமையிலான பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
வயது அடிப்படையில் கட்டா, குமிதே ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா் கிருஷ்ணா தங்கப் பதக்கம் வென்றாா். இதேபோல, காா்த்திகேயன், சரவணன், பிரேமானந்ததாசன் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவா்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். கராத்தே பயிற்சியாளா் சேதுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...